மாலைதீவில் நடைபெற்ற தெற்காசியவை சேர்ந்த ஐந்து நாடுகளின் போட்டியாளர்கள் கலந்துகொண்ட உருளைச் சப்பாத்து வேகச்சறுக்குப் போட்டியில் பங்குபற்றிய முருங்கன் டொண் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மாணவி செல்வி பேதுருப்பிள்ளை யுகான்சிக்கா அவர்கள் ஒன்பது வயதுப்பிரிவில் 100M, 200M, 300M ஓட்ட நிகழ்வுகளில் பங்குபற்றியதுடன் 300M போட்டியில் 3ஆம் இடத்தை வென்று வெண்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
இம்மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு ஆனி மாதம் 25ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை முருங்கன் டொண்பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையின் அதிபர் அருட்தந்தை பிரியங்கன் மார்க் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செல்வி பேதுருப்பிள்ளை யுகான்சிக்கா அவர்கள் தனது பெற்றோருடன் முருங்கன் பேருந்து நிலையத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் சிறப்பான வரவேற்புடன் அழைத்துவரப்பட்டு முருங்கன் பொதுவைத்தியசாலைக்கு முன்பாக அவருக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதை தொடர்நது பாண்ட் வாத்திய இசையுடன் பாடசாலைக்கு அழைத்துவரப்பட்ட அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் முருங்கன் மத்திய கல்லூரி அதிபர் திரு. இராசதுரை அமலதாஸ், மதத்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.

