வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டி ஆனி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை மாணவி செல்வி விந்துசா கஜேந்திரன் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 79 கிலோகிராம் நிறைப்பிரிவில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
அத்துடன் அன்றைய தினம் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ்மொழித் தின மாகாணமட்ட பிரிவு – 2 வாசிப்புப் போட்டியில் பங்குபற்றிய மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை மாணவி செல்வி அஸ்வினி செல்வக்குமார் முதலாம் நிலையை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

