யாழ்ப்பாணம், இளவாலை மற்றும் தீவக மறைக்கோட்டங்களின் பொதுநிலையினர் கழக கூட்டங்கள் ஆனி மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெற்றன.

திருநெல்வேலி புனித சவேரியார் ஆலயத்தில் கழக இயக்குநர் அருட்தந்தை ஹில்ரன் அவர்களின் தலைமையில் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டத்தில் சிறப்புரையும் தொடர்ந்து கழக செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற்றது.

சிறப்புரையை நாவாந்துறை பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரிபன் ராஜ் அவர்கள் “பொதுநிலையிரும் சமூகத் தொடர்பாடல் ஆண்டும்” என்னும் தலைப்பில் வழங்கினார்.

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழகத் தலைவர் திரு. போல் யேசுதாசன் அவர்களின் தலைமையில் அன்றையதினம் நடைபெற்ற இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டத்தில் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது.

அத்துடன் தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டமும் ஆனி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் வழிநடத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு புதிய செயற்குழு தெரிவும் இடம்பெற்றது.

By admin