வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட வீதி நாடகப்போட்டி ஆனி மாதம் 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், மன்னார் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழு கலைஞர் அணியின் கலையருவி கலாமன்றம் முதலாமிடத்தையும் மாந்தை பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த மாந்தை மேற்கு கலை கலாசார மன்றம் இரண்டாமிடத்தையும், மடு பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த கலைமகள் கலாமன்றம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

இப்போட்டியில் மன்னார் மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.

By admin