வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட சர்வமத பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப்போட்டி அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றிபெற்ற யூனியன் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் திரு. வரதன் அவர்களின் தலைமையில் ஆனிமாதம் 08ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண நாகவிகாரை ஸ்ரீ விமலதேரர், தர்மதேரர், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம், சிவலோகநாத குருக்கள், சர்வமத பேரவை செயலாளர் அருட்பணியாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.

இப்போட்டியில் 100 வரையான மாணவர்கள் பங்குபற்றியதுடன் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஊடாக எழுவைதீவு பங்கிலிருந்து பங்குபற்றிய யேசிந்திரன் யேபின்சன் மற்றும் ஜோன் கிறிஸ்தோப்பர் கிஸ்ரையின் ஆகிய இரண்டு மாணவர்கள் பரிசு பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

By admin