யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத் துறையினரால் முன்னெடுக்கப்பட்ட “அந்நியன்” நவீன நாடக அளிக்கை ஆனி மாதம் 05ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். கோட்டை சுவரின் பின்னணியில் அதனுள் அமைந்துள்ள புற்தரை பகுதியில் நடைபெற்றது.
ஆங்கில நாடக ஆசிரியர் கேக்ஸ்பியரின் “The Tempest” எனும் நாடகத்தை தழுவி ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளின் கலவையாக பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் என முப்பதுக்கு மேற்பட்ட கலைஞர்களின் பங்குபற்றுதலோடு அளிக்கை செய்யப்பட்ட இந்நாடகத்தை ஆங்கில இலக்கியத் துறை விரிவுரையாளரும் நாடகக் கலைஞருமான முனைவர் தனுக்க பண்டார அவர்கள் நெறியாள்கை செய்ததுடன் இசையமைப்பு, பாடகர் குழாம் ஆகியவற்றை வாசுகி ராஜசிங்கம், ரிமாண்ட்ரா விஜயசூரிய ஆகியோர் நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி ஆகிய இடங்களிலிருந்து பெற்றோர், உறவினர், நாடக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

