மன்னார் மறைமாவட்டம் ஜோசப்வாஸ்நகர் நற்கருணை ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மரிசால்பிள்ளை ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வைகாசி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி ஆனி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை காலை பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதன திருப்பலியும் மாலை திருப்புகழ் மாலையும் இடம்பெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை மரிசால்பிள்ளை ஜெயபாலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற முதல்நன்மை அருட்சாதன திருப்பலியில் 14 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
மாலை நடைபெற்ற திருப்புகழ் மாலையை யாழ். மறைமாவட்ட குருவும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி நிதி முகாமையாளருமான அருட்தந்தை ஜோண் றெக்ஸன் அவர்கள் நெறிப்படுத்தினார்.
07ஆம் திகதி இயேசுவின் திருவுடல் திரு இரத்த பெருவிழா இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இத்திருப்பலியில் அருட்தந்தை ஜோண் றெக்ஸன் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை கியூபேட் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

