கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழாவை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட புனித செபஸ்தியார் பேராலய பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிறப்பு வழிபாட்டுடன் ஆரம்பமாகி நகர மத்தியிலுள்ள மடுமாதா திருச்சுரூபம், ​புனித மரியன்னை ஆலய வளாகம், மெழுகுதிரி சந்தி ​ஆகிய இடங்களில் தரித்து மீண்டும் பேராலயத்தை வந்தடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை ஆசீர்வாதத்துடன் நிறைவடைந்தது.

இப்பேரணி தரித்த இடங்களில் சிறப்பு மறையுரைகளும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெற்றதுடன் இப்பவனியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென 3000ற்கும் அதிகமானோர் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 120 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin