வட்டக்கச்சி பங்கின் கல்மடு நாவல்நகர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
06ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கிளறேசியன் சபை அருட்தந்தை சூசை அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

