பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
01ஆம் திகதி திங்கட்கிழமை புனிதரின் கொடியேற்றப்பட்டு 04ஆம் திகதி வியாழக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
இத்திருப்பலியில் ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் பங்குபற்றியதுடன் மாலை புனிதரின் திருச்சொருப தேர்ப்பவனியும் தொடர்ந்து ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

