குருநகர் பங்கு கடற்கரை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை டினேஸன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

