நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழா நற்கருணை பவனி ஆனி 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி புனித யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித அந்தோனியார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.

அத்துடன் நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் அன்றைய தினம் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 13 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin