கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழாவை முன்னிட்டு உரும்பிராய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி யூலனூர் ஹென்றியரசர் ஆலயத்தில் அரம்பமாகி புன்னாலைக்கட்டுவன் பலாலி வீதியூடாக உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் திருப்பலியுடன் நிறைவடைந்தது.
திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
அத்துடன் எழுவைதீவு பங்கில் பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலியுடன் அரம்பமாகி புனித செபமாலை அன்னை ஆலயம், புனித பற்றிமா திருச்சொருபம் என்பவற்றினூடாக புனித தோமையார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.
இவ்வழிபாடுகளை அருட்தந்தையர்கள் நிலான் யூலியஸ், செபஜீவன், சசி ஆகியோர் நெறிப்படுத்தினர்.
இப்பவனியில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

