திருகோணமலை மறைமாவட்டம் மூதூர் மறைக்கோட்ட இளையோருக்கான தலைமைத்தவ பயிற்சி ஆவணி மாதம் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மூதூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை சேவியர் ரஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரை, குழுச்செயற்பாடுகள், நற்கருணை வழிபாடு, திறன் இனங்காணல் பயிற்சி, விளையாட்டுக்கள் போன்றவை இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மூதூர் மறைக்கோட்ட பங்குகளைச் சேர்ந்த 50ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

