மானிப்பாய் புதுமடம் புனித கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் சபை திருவிழாவும் முதியோர் தின நிகழ்வும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருவிழா திருப்பலியும் தொடர்ந்து முதியோருக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

இவ்ஒன்றுகூடல் நிகழ்வில் முதியோர்களுக்கான கௌரவிப்பு, பரிசளிப்பு மகிழ்வூட்டல் செயற்பாடுகள், மகிழ்வு விருந்து என்பன இடம்பெற்றதுடன் இப்பரிசில்களை நோர்வே நாட்டில் வசிக்கும் ஆலயத்தை சேர்ந்த திரு சந்தியாப்பிள்ளை சைமன் அவர்களின் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் 35 வரையான முதியோர் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்துதலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள் மறையாசிரியர்கள் மற்றும் சிறுவர்களுக்கான அன்பளிப்பு வழங்கல் என்பன இடம்பெற்றன.

By admin