சில்லாலை புனித கதிரை மாதா முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் பொறுப்பாசிரியர்கள் ஆன் நிரோசா மற்றும் வேர்ஜின் லக்சிகா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்கள் பெற்றோரின் பாண்ட் வாத்தியத்துடன் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
தொடர்ந்து சிறார்களின் கலைநிகழ்வுகள், பரிசளிப்பு, ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு என்பன நடைபெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தை இம்மானுவேல் தேவராஜன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் சகோதரி திருமதி ஆன் அம்மையார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

