வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பூநகரி பிரதேச சபையின் கீழ் இயங்கும் இரணைதீவு மற்றும் பல்லவராயன்கட்டு நூலகங்களினால் பூநகரி கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இப்போட்டியில் பல்லவராயன்கட்டு டொண் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையை சேர்ந்த 15ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றி வெற்றிபெற்றனர்.

இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்றது.

அத்துடன் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பல்லவராயன்கட்டு டொண் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையிலும் அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வாசிப்பு வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

மாணவர்களின் வாசிப்புத்திறன், மொழியறிவு மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் அன்றைய தினம் நடைபெற்றது.

இப்போட்டிகளிலும் அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.

By admin