யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி வாணி விழா ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையரங்கில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி. மேரி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்ற பிரதி இயக்குநர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழிபாடும் தொடர்ந்து நடனங்கள், பாடல், புல்லாங்குழல், மிருதங்க, வயலின் இசை போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
யாழ். பல்கலைக்கழக கல்வியியற்துறை விரிவுரையாளர் திரு. சர்வேஸ்வரா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்த சிறப்பித்த இந்நிகழ்வில் மன்ற அங்கத்தவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

