யாழ்ப்பாணம் புனிதர் சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அழைக்கப்பட்ட பாடசாலை மாணவிகளுக்கான உடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒக்டோபர் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு. லெனின்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், சென். ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயம், கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம், புனிதர் சாள்ஸ் மகா வித்தியாலயம் மற்றும் சென். றொக் வித்தியாலயம் ஆகிய ஐந்து பாடசாலை அணிகள் கலந்துகொண்டன.
இப்போட்டியில் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் முதலாமிடத்தையும், சென். ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
இந்நிகழ்வில், யாழ். வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் மேஜர் இருதயநாயகம் சசிக்குமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் திருமதி டயானா ஆன்சலம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் இப்போட்டிக்கான நிதியனுசரணையை அமரர் பேனாட் ஆன்சலம் அவர்களின் நினைவாக அவரது குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.

