கொழும்பு றோயல் கல்லூரி ரெனிஸ் கழகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 09 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான Orange ball ரெனிஸ் போட்டி ஒக்டேபார் மாதம் 17 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு றோயல் கல்லூரி ரெனிஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் பரிமிளன் ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் முதலாமிடத்தையும் செல்வன் பரிமிளன் மற்றும் செல்வன் ஆருஸன் ஆகியோர் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் முதலாமிடத்தையும் பெற்று சம்பியன் பட்டங்களை கைப்பற்றினர்.
அத்துடன் இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஜூன் மாதம் 28ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்ற தேசிய பொசன் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பொசன் கூடாரப் போட்டியில் பங்குபற்றிய அணி, தேசிய ரீதியில் 8ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இப்போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு சாரணர்களும், மூன்று திரிசாரணர்களும், யாழ்ப்பாண மாவட்ட சாரணர் தலைவர் திரு. சைலகிரீசன் அவர்களும் பங்குபற்றியதுடன் இவ் அணியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி சாரணர் துருப்புத் தலைவர் துவருஜன் அவர்களும் இணைந்துகொண்டார்.
இப்போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்கள் யாழ்ப்பாண மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு. பிரதீபன் அவர்களால் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

