யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளிவிழா நிகழ்வு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

கொமிற்சிய ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மரியாயின் சேனை கியூரியா ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு கோயில்குடியிருப்பு கப்பலேந்தி மாதா ஆலயத்திலிருந்து முல்iலைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயம் வரையான செபமாலை பேரணி நடைபெற்றது.

பேரணி நிறைவில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் திரு உரை இடம்பெற்றதுடன் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை பிரசீடியங்களை சேர்ந்த 600ற்கும் அதிகமான சேனையினர் கலந்துகொண்டனர்.

By admin