யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி கனிஸ்ட இடைநிலைபிரிவு மாணவர்களின் கலாச்சார விழா ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் தரம் 06 முதல் தரம் 08 வரை கல்வி கற்கும் மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் நடனம், ஆங்கிலப்பாடல், குழுப்பாடல், சிங்கள நடனம், குழு நடனம், கலப்பு நடனம், பாடல், சிறுவர் நாடகம், வில்லுப்பாட்டு, ஆடை அலங்கார அணிவகுப்பு, படைப்பாற்றல் நடனம், நாட்டுப் புறப்பாடல், ஆங்கில நாடகம் போன்ற கலைநிகழ்வுகளுடன் கல்லூரி அசிரியர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை தர்சன் லம்பேட் அவர்களின் தயாரிப்பு உருவாக்கத்தில் தரம் 08 மாணவர்களின் நடிப்பில் உருவான “The Lost key” குறும்பட வெளியீடும் இடம்பெற்றன.
கல்லூரியின் பழைய மாணவனும் கரித்தாஸ்- கியூடெக் நிறுவன இயக்குநருமான அருட்தந்தை அன்ரோ டெனீஸியஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

