யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் மறைக்கோட்ட இளையோருக்கான கள அனுபவ பயணம் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் திருகோணமலை மறைமாவட்டத்திற்கு சென்று அங்கு சாம்பல்தீவு பங்கு இளையோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தை தரிசித்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டிலும் கலந்துகொண்டனர்.

நற்கருணை வழிபாட்டை உவர்மலை குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தையும் திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனருமான அருட்தந்தை சேவியர் ரஜீவா அவர்கள் நெற்படுத்தினார்.

அத்துடன் இளையோர் திருகோணமலை மறைமாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் 22 இளையோர் பங்குபற்றினர்.

By admin