பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மறைக்கல்வி கற்பித்தல் முறை தொடர்பான கருத்தமர்வு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை தும்பளை புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது.

மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் இயேசு சபை அருட்தந்தை றொபேர்ட் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள் ஊடாக மறையாசிரியர்களை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 100ற்கும் அதிகமான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin