யாழ். கல்வி வலய பாடசாலைகளில் கத்தோலிக்க திருமறை கிறிஸ்தவ பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2027ஆம் ஆண்டு கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலைத்திட்ட அறிமுக செயலமர்வு ஒக்டோபர் மாதம் 19,20ஆம் திகதிகளில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசக இணைப்பாளர் திருமதி விக்டோரியா எல்விஸ் பிரஸ்லி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்செயலமர்வை திருமதி சுனித்தா வெனான்சியஸ், திருமதி ரஜனி கெனத், திருமதி விக்டோரியா எல்விஸ் பிரஸ்லி ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 2027ஆம் ஆண்டு தரம் 06 மாணவர்களுக்கு கத்தோலிக்க திருமறை கிறிஸ்தவ பாடத்தை கற்பிக்கவுள்ள 35 ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
அத்துடன் வலிகாம கல்வி வலய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கலைத்திட்ட அறிமுக செயலமர்வும் ஒக்டோபர் மாதம் 22, 23ஆம் திகதிகளில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது.
வலிகாம கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசக இணைப்பாளர் திரு அனுஸ்ரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்செயலமர்வை திருமதி விக்டோரியா எல்விஸ் பிரஸ்லி மற்றும் திரு அனுஸ்ரதாஸ் ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 50 ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

