மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வாணி விழா ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நவராத்திரி பாடல், நவராத்திரி பேச்சு, சக்தி வழிபாடு பேச்சு, தோரணம் பின்னுதல், கோலம் போடுதல், மாலை கட்டுதல் போன்ற போட்டிகளும் ‘இப்படித்தான் வாழ்ந்தோம் இப்படித்தான் வாழ்வோம்’ என்னும் தலைப்பில் கலையரங்கமும், போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றன.
அத்துடன் பாடசாலை பிரதி அதிபர் திருமதி. கிரிசாந்தி ரவீந்திரன் அவர்களின் சேவை நயப்பு நிகழ்வும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருமதி. கிரிசாந்தி ரவீந்திரன் அவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர், மாணவர்கள், பழைய மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி அன்பளிப்புக்களும் வாழ்த்து மடலும் வழங்கப்பட்டன.

