பதுளை மறைமாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் திருவருட்சாதன ஆண்டை சிறப்பித்து பாடினவெல புனித லோறன்சியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவருட்சாதன தின சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றொபேட் கிளாறட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கருத்தமர்வும் இடம்பெற்றன.

இக்கருத்தமர்வை பதுளை புனித எமார்ட் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை மொடஸ்ரஸ் பெர்னாண்டோ மற்றும் குருமட மாணவர்கள் இணைந்து நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 120 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin