கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் யோகராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
அத்துடன் கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாலயம் ஆவணி மாதம் 09ஆம் திகதி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் திறந்துவைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

