கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் ஆடி மாதம் 11ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழகத் தலைவர் திரு. குணசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மறைக்கோட்ட கழக பொறுப்புகள் கடமைகள் மற்றும் பொதுநிலையினர் கழக யாப்பு பற்றிய விளக்கவுரைகளும் புதிய செயற்குழு தெரிவும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பொது நிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ், கிளிநொச்சி பங்கின் உதவி பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன், யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகச் செயலாளர் திரு. போல் யேசுதாசன் மற்றும் கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குப் பிரதிநிதிகளென 25 பேர் கலந்துகொண்டனர்.

By admin