யாழ். மறைமாவட்ட ஆயர் தியான இல்லத்திற்கு விஜயம்
வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குருக்களின் வருடாந்த தியானத்திற்கான முன்னேற்பாடுகளை ஆராயும் நோக்கில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் மறைமாவட்ட நிதி முகாமையாளருடன் இணைந்து ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை தியான இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.…
நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு
தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக தீவக மறைக்கோட்ட இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட ஊடக இணைப்பாளர்…
சில்லாலை பங்கு வின்சன்ட் டி போல் சபை மாணவர் பந்திகளின் வருடாந்த பொதுக்கூட்டம்
சில்லாலை பங்கு புனித யோசவ்வாஸ், புனித யாகப்பர் வின்சன்ட் டி போல் சபை மாணவர் பந்திகளின் வருடாந்த பொதுக்கூட்டம் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலய டெய்சி மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார்…
புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய தேசிய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு
புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கான விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள், மகிழ்வு விருந்து என்பன…
நாரந்தனை பங்கில் செபமாலை பேரணி
நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் வழிநடத்தலில் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆரம்பமாகி, புனித…
