செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் யாத்திரைத்தல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழாவும் அர்ச்சிப்பும் ஆவணி மாதம் 10ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து யாத்திரைத்தலத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலி நிறைவில் திறப்பு விழா மலர் மற்றும் அமரர் அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு “ஊழியன்” மலர் ஆகியவற்றின் வெளியீடுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

இவ் யாத்திரைத்தல கட்டுமானப்பணிகளுக்கான தொடக்க வேலைகள் அருட்தந்தை ஜோதிநாதன் அவர்களின் பணிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் காலத்தில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் ஜஸ்ரின் அவர்களின் காலத்தில் வேலைகள் நிறைவடைந்து திறந்துவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin