அமலமரித்தியாகிகள் சபை கொழும்பு மாகாண குருக்களுக்கான குருத்துவ திருநிலைப்படுத்தல்

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த கொழும்பு மாகாண குருக்களுக்கான குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு புரட்டாதி மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு 10 புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. அனுராதபுர மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நிஸாந்த சாகர ஜெயமான்ன அவர்களின் தலைமையில்…

யாழ். மறைமாவட்ட ஆயர் உருத்திரபுரம், கோணாவில் மற்றும் தர்மபுரம் பகுதிகளுக்கு விஜயம்

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், புரட்டாதி மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை உருத்திரபுரம், கோணாவில் மற்றும் தர்மபுரம் பகுதிகளுக்கு விஜயம் செய்து, அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளை சந்தித்து, அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினார். உருத்திரபுரம் பங்கில்,…

கத்தோலிக்க, கிறிஸ்தவ பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்தி செயலமர்வு

யாழ். வலய கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட யாழ். கல்வி வலய பாடசாலைகளில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்தி செயலமர்வு புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.…

அனலைதீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

தீவகம், அனலைதீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளறேசியன் சபை அருட்தந்தை இதயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

சில்லாலை பங்கு மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு

சில்லாலை பங்கு மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் மாலை மாணவர்களுக்கான விளையாட்டுக்களும்…