யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலையக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிநடத்தலில், கழகத் தலைவர் திரு. எசார்வே அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் கலந்து கழகத்தின் செயற்பாடுகளைப் பாராட்டி சிறப்பு ஆசீர் வழங்கினார்.
மேலும் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் கலந்து ‘கூட்டொருங்கியக்கத் திருஅவையின் பயணம் மற்றும் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நற்கருணை மாநாட்டுக்கான தயார்ப்படுத்தல்கள்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஹில்டன் அவர்களும், கழக உறுப்பினர்கள் 60 பேரும் கலந்துகொண்டனர்.

