திருத்தந்தையின் வழிநடத்தலில் உலக அமைதி வேண்டி ஒரு மில்லியன் சிறுவர்களோடு இணைந்து உரும்பிராய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பவனி ஐப்பசி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்கின் அனைத்து ஆலய மறைக்கல்வி மாணவர்களையும் மறையாசிரியர்களையும் இணைத்து இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய சுற்றுவீதியில் செபமாலை பவனியும் தொடர்ந்து ஆலயத்தில் செமாலையும் இடம்பெற்றதுடன் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களால் இறுதி ஆசீரும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள் இறைமக்களென நூற்றுக்கணக்கானோர் கலந்து உலக அமைதிக்காக செபித்தனர்.

By admin