யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம்
யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் மே மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் திரு செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் மறைக்கோட்ட கழக இயக்குநர் அருட்தந்தை றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
குருநகர் மீன் விற்பனை நிலையத்தில் சிறப்பு நிகழ்வு
தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பரின் திருவிழாவையும் தொழிலாளர் தினத்தையும் சிறப்பித்து குருநகர் மீன் விற்பனை நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு மே மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கடற்தொழில் உபகரணங்கள், விற்பனை நிலையங்கள் ஆசீர்வதிப்பும் தேனீர்…
சிலாவத்தை புனித அன்னாள் ஆலய பங்குப்பணிமனை திறப்புவிழா
சிலாவத்தை புனித அன்னாள் ஆலய பங்குப்பணிமனை திறப்புவிழா வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து பங்குப்பணிமனையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அன்னை திரேசா நற்பணிமன்றம்
இறைமக்களுக்கு அன்புச்சேவைகள் புரியும் அன்னை திரேசா நற்பணிமன்றம் சித்திரை மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் அன்னை தெரேசா கன்னியர் மடத்தில்…
இளவாலை புனித யூதாததேயு ஆலய “கலை மாலைப் பொழுது” கலை நிகழ்வு
இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழா சிறப்பு நிகழ்வான “கலை மாலைப் பொழுது” கலை நிகழ்வு சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் தலைமையில் யூபிலி கலைக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
