யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த உயர்தர பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் ஆனி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றன.
மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையம், அல்லைப்பிட்டி மொண்பேட் சர்வதேச பாடசாலை, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, பருத்தித்துறை புனித தோமையார் றோ.க பெண்கள் பாடசாலை, கிளிநொச்சி புனித திரேசாள் பெண்கள் கல்லூரி, முல்லைத்தீவு மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற இச்செயலமர்வுகளில் 300 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

