யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முல்லைத்தீவு மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆனி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் மற்றும் அருட்தந்தை அஜந்தன் ஆகியோர் இணைந்து அன்பிய ஏழு படிமுறை தொடர்பாகவும் அன்பிய வாழ்வு தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கினர்.
தொடர்ந்து முல்லைத்தீவு மறைக்கோட்ட செயற்குழு மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்கள் குழு தெரிவும் இடம்பெற்றது.
செயற்குழு தெரிவில் சிலாவத்தை பங்கை சேர்ந்த திருமதி சுபா அவர்கள் செயலாளராகவும் இரணைப்பாலை பங்கைச் சேர்ந்த திருமதி ஜெயசீலி அவர்கள் உப செயலாளராகவும் முல்லைதீவு பங்கைச் சேர்ந்த திருமதி. மரியசீலி அவர்கள் பொருளாளராகவும் அளம்பில் பங்கை சேர்ந்த செல்வன் ஜெஸ்மின் ஜோன் அவர்கள் ஊடக உதவியாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் 57 அன்பிய ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

