இளவாலை, மாரீசன்கூடல் புனித கயித்தார் முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா ஆனி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனித கயித்தார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் வழிநடத்தலில் முன்பள்ளி ஆசிரியர் திருமதி அருந்தவராணி அவர்களின் நெறிப்படுத்தலில் திருமதி நிதர்சனா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களின் யோனா, நெகேமியா ஆகிய இரு இல்லங்களுக்கிடையிலான மைதான விளையாட்டுகளுடன் சிறப்பு நிகழ்வுகளான வினோத உடை போட்டி, இசையும் அசைவும், பெற்றோருக்கான விளையாட்டுக்கள் மற்றும் பரிசளிப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இளவாலை றோ.க.த ஆண்கள் பாடசாலை அதிபர் திரு. கந்தசாமி பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சண்டிலிப்பாய் முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி டெறிந்திரன் ஆன் நிரோஸா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் புனித கயித்தார் ஆலய அருட்பணி செயலாளர் திரு. கயித்தாம்பிள்ளை அன்ரனிஸ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

