மன்னார் மறைமாவட்ட MAADAP மாற்றுத் திறனாளிகள் அமைப்பில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வும் ஒளிவிழாவும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் இயக்குநர் அருட்தந்தை ரஜனிகாந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆளுனர் சபை தலைவரும் மறைமாவட்ட குருமுதல்வருமான அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் MAADAP மாணவர்களின் கிராமிய நடனம், குழு நடனம், தனிப்பாடல், ஆசிரியர்களின் பாடல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் அபிநய நடனம் போன்ற கலைநிகழ்வுகளும் பரிசளிப்பும் நடைபெற்றன.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் நலன்விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.

