யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் நாரந்தனை பங்கின் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு நவம்பர் மாதம் 13, 14, 15ஆம் திகதிகளில் நடைபெற்றது.

நாரந்தனை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இல்ல தரிசிப்புக்கள், உளவியல் ஆற்றுப்படுத்தல், சிறப்பு வழிபாடுகள், சிறுவர், இளையோர், பெற்றோருக்கான கருத்தமர்வு, திருப்பலி என்பன நடைபெற்றன.

இவ்ஆற்றுப்படுத்தல் நிகழ்வை திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகள் நெறிப்படுத்தினர்.

By admin