மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா நவம்பர் மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மட்ட தமிழ் தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வலய, கோட்ட, மாகாண மற்றும் தேசியமட்ட தமிழ் மொழி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் தமிழின் பெருமை பற்றிய சிறப்புரை, பேச்சு, கவிதை, பாடல், நடனங்கள் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்சகோதரி கொஸ்கா ஜோக்கிம், அருட்சகோதரி றீற்றா றொமானி மற்றும் ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி கல்யாணி விக்னேஸ்வரமூர்த்தி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

