கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் இயங்கிவரும் புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு நவம்பர் மாதம் 18ஆம் திகதி கடந்த புதன்கிழமை கல்லூரி ஜோய் கிறிஸோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது.
காப்பாளர் அருட்தந்தை ஜெராட் சவரிமுத்து அவர்களின் வழிகாட்டலில், சமூகசேவைக் குழுத் தலைவர் அருட்சகோதரன் யேசுதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குருக்கள், குருமட மாணவர்கள், கல்லூரிப் பணியாளர்களென 25ற்கும் அதிகமான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

