மாரீசன்கூடல் பங்கு சேந்தான்குளம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ்; அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 07 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

இத்திருப்பலியில் முன்னாள் பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களும் இணைந்து செபித்தார்.

By admin