தர்மபுரம் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி உருவாக்குனர் அருட்தந்தை ஜெறாட் சவிரிமுத்து அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெற்றது.
அத்துடன் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருப்பொருள் காப்பகமும் பங்குத்தந்தை அவர்களால் ஆவணி மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.

