மாரீசன்கூடல் பங்கிற்குட்பட்ட சேந்தாங்குளம் புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டு 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை செபமாலைதாசர் சபை அருட்தந்தை இராஜசேகர் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை ஞானறூபன் அவர்களும்; தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
பருவகால கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த குருநகர் மக்களால் வலித்தூண்டல் பகுதியில் 1967ஆம் ஆண்டு கட்டப்பட்ட இச்சிற்றாலயம் பின் நாட்களில் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் மறைமாவட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
யுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் குருநகர் மக்களால் புனரமைக்கப்பட்ட இச்சிற்றாலய வருடாந்த திருவிழா ஆவணி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

