வட்டக்கச்சி இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை புனித வளனார் அச்சக முகாமையாளர் அருட்தந்தை எயின்ஸிலி றொசான் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

அருட்தந்தையர்கள் எயின்ஸிலி றொசான் மற்றும் றோய் பேடினன்ட் ஆகியோரின் குருத்துவ வெள்ளிவிழா யூபிலியை நினைவுகூர்ந்து திருவிழா, நற்கருணை திருப்பலிகளின் நிறைவில் அவர்களுக்கான கௌரவிப்புக்களும் நடைபெற்றன.

By admin