கோப்பாய் பிரதேசத்தில் அன்னை தெரேசாள் அன்புக்கன்னியர் சகோதரிகளால் நடாத்தப்படும் அமைதி இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித அன்னை தெரேசாள் திருவிழா புரட்டாதி மாதம் 5ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

கன்னியர் மட முதல்வி அருட்சகோதரி ஜோஸ் அக்குவைனஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்கள் கலந்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இதிருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருநகர் பங்கு அன்னை தெரேசா நற்பணி மன்ற அங்கத்தவர்கள் கலந்து செபித்தனர்.

By admin