திருகோணமலை மறைமாவட்ட பங்குகளின் தெரிவுசெய்யப்பட்ட மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ‘இலங்கை கெரிக்மா’ வதிவிட பயிற்சி பாசறை ஆவணி மாதம் 29ஆம் திகதி முதல் புரட்டாதி 01ஆம் திகதி வரை உப்புவெளியில் அமைந்துள்ள மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலையத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் வழிநடத்தலில் ‘யார் நான்?’ என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர் உயர் மறைமாவட்ட அருட்தந்தை டெரன்ஸ் மற்றும் அவரது குழுவினர் கலந்து குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், கருத்துரைகள், திருப்பலி என்பவற்றின் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 55 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin