திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு ஆவணி மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ‘வாழ்வின் இலட்சியம்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற இக்கருத்தமர்வை நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரிகள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள், விளையாட்டுக்கள் என்பவற்றின் ஊடாக நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 150 மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்ததுடன் நிறைவில் மாணவர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் ஆலய மறைக்கல்வி மாணவிகளுக்கான இறையழைத்தல் கருத்தமர்வு ஆவணி மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரிகள் நெறிப்படுத்திய இந்நிகழ்வில் தரம் 9 தொடக்கம் 11 வரையான 20 மாணவிகள் பங்குபற்றி பயனடைந்தனர்.

