கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா ஆவணி மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் ஜோகராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் சமய தலைவர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வாலயத்திற்கான அடிக்கல் 2012ஆம் ஆண்டு அப்போதைய பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜோய் பர்னாண்டோ அவர்களின் காலத்தில் நாட்டப்பட்டு அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையர்கள் ஸ்ரனிஸ்லோஸ் பிலிப், ஜீவனதாஸ் பர்னாண்டோ, றெனே பீஸ்மன், ஸ்ரனிஸ்லோஸ் சுவாம்பிள்ளை ஆகியோரின் காலத்தில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin